லாச்சப்பல் பகுதியில் தியாக தீபம் திலீபன் பன்னிரெண்டாம் நாள் நினைவு நிகழ்வுகள்

2 வருடங்கள் ago

author: admin

பரிஸ் லாச்சப்பல் பகுதியில் கடந்த 15ம் திகதி நிறுவப்பட்ட தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கான  தொடர் வணக்கத்தின்  இறுதி நாளான இன்று 26/09/2022  தியாக தீபம் திலீபன் பன்னிரெண்டாம் நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின. லாச்சப்பல் சந்தியில் நிறுவப்பட்டிருந்த நினைவு வணக்க பீடத்தில் காலை 10.48 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திலீபன் அவர்களுக்காகவும் தாயக போரில் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காகவும் நாட்டுப் பற்றாளர்களுக்காகவும் அநியாயமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த வர்த்தக பெருமக்கள் பொதுமக்கள் போராளிகள் ஆதரவாளர்கள் அனைவராலும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் நினைவான கவிதையும் தியாக தீபத்தின் இலட்சிய வாழ்வையும் சாவையும் குறித்த உரையும் இடம் பெற்றன. தற்போது அடையாள உண்ணாநோன்பும் அவ்விடத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது . தொடர்ந்து அப்பகுதிக்கு வரும் மக்கள் மலர் வணக்கத்தினை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். மலர் வணக்கம் மாலை 5 மணி வரை அவ்விடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஐந்து மணிக்கு தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவுகளை சுமந்தபடி அடையாள உண்ணாநோன்பும் நிகழ்வுகளும் நிறைவு பெறும்.

« of 3 »