முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிய காவிய நாயகர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. 2023

1 வருடம் ago

author: admin

இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட இருபது மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 22.10.2023 அன்று பிரான்ஸ், நாட்டில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தேசியக்கொடி ஏற்றலுடனும் பொது மாவீரர் திருவுருவப் படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து இறுதிப்போரில் வீரசவைத் தழுவிய இம் மாவீரர்களுக்கு அவர்களின் உரித்துடையோர் முன்னாள் போராளிகள்  உறவினர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து தலைமை உரை, மாவீரர்களுக்கான நினைவுரையுடன் மாவீர்களுக்கான நினைவுப்பாடலும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றது.

இந்நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப்போரில்  வீரச்சாவைத் தழுவிய காவிய நாயகர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

« of 3 »

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் விபரங்கள்