நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் 2025

4 வாரங்கள் ago

author: admin

பிரான்சின் பாரிசின் புறநகர்களில் ஒன்றான Drancy நகரில் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளும், தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் எழுச்சியுடன் நடைபெற்றது
குறித்த நிகழ்வில் பொதுச் சுடரினை Drancy நகரின் முதலாவது துணை நகரபிதா Anthony MANGIN ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதுடன் அகவணக்கம், மலர் வணக்கம் ஆகியமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் Drancy நகரின் முதலாவது துணை நகரபிதா திரு.Anthony MANGIN அவர்களும் Drancy நகரின் ஏழாவது துணை நகரபிதா Seine-Saint-Denis மாவட்ட சபை உறுப்பினருமான திரு.Hamid Chabani அவர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கியிருந்தார்கள்.
தொடர்ந்து பிரான்சிஸ் வாழும் தமிழ் இளையோர்களின் எழுச்சி நடனம், கவிதை, பேச்சு , ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வை பிரான்ஸை தளமாக இயங்கும் தமிழ் பண்பாட்டு வலையம் -பிரான்சு , Ç‘est Nous les Tamouls (சே நூ தமிழ்) ஆகிய அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டது
« of 5 »