Ouverture Notre Site internet

2 வருடங்கள் ago

author: admin

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து லாச்சப்பல் பகுதியில் எமது தேசியச் செயற்பாடுகளை நாம் செய்து வந்தபோதும் எமக்கான அடையாளங்கள் நாம் எமதுபாரிசு 10  நகரசபையுடன் பேணிவந்தமை குறைவாகவே இருந்துள்ளது.

நாம் எமது தேசியத்தலைவரின் அகவை நாட்கள், பொங்கல் விழா, தியாகி திலீபன் நினைவு நாள், மாவீரர் நாள், போன்றவைகளை கடந்த 13 வருடங்களாக லாச்சப்பல் பகுதியில் நடாத்தி வந்தமையை யாவரும் அறிவீர்கள்.

கடந்த முள்ளிவாய்கால் நினைவு நாளான   2022  மே 18 அன்று எமது தேசியக்கொடியினை முள்ளிவாய்கால் பேரணியில் பிடிக்க கூடாது என்று  காவல்துறையினர் சொன்னபோது  நாம் அதனை மறுத்து வாதடியபோது  எமக்கு சரியான தகவல்களை அந்த பேரணி ஒழுங்கு செய்த  யாரும் தர மறுத்தார்கள். அந்த நேரம் நாம் எமது இனத்தின் தேசியக்கொடியினை மீண்டும் அதே இடத்தில் ஏற்ற வேண்டும் என்ற  திடம்சங்கம் கொண்டு  உருவாக்கியதே    சே நூ தமிழ் c’est nous les tamouls என்ற இந்த  நாமம். அதனை தொடர்ந்து வந்த நாட்களில்  நாம் அனைத்து அரசியல் தலைமையுடன் இணைந்து தேசியக்கொடிக்கான  காவல்துறையின் அனுமதியுடன் அதே இடத்தில் எமது தேசியக்கொடியை பட்டொளி வீசி பறக்க ஏற்றி வைத்தோம். இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

அந்த  வேகத்தில் எமக்கு தேவையான அனைத்து அரசியல் விடயங்களையும் கையாள வேண்டும் என்றும் எமக்கு எதிராக எத்தனை பேர் எது சொன்னாலும் எதை சொன்னாலும்  அதை கடந்து  எமது இலக்கு தேசியம், தலைவர், மாவீரர், என்ற இந்த கோட்பாட்டுடன் இநாம்  இயங்க ஆரம்பித்தோம்.

அந்த வகையில் நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளை யாவரும் அறியும் வண்ணம் ஒரு இணையத்தளம் வேண்டும் என்பதை உணர்ந்த நாம்  இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த இணையத்தளத்தை  16/09/2022 அன்று  பாரிசு 10  நகர சபையின் அதிகாரிகளுடன் இணைந்து உங்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளோம்.

இனி வரும் காலங்களில் லாச்சப்பல் பகுதியில் மற்றும் எமது இனத்தின்  செயற்பாடுகளையும்  சே நூ தமிழ் c’est nous les tamouls ஆகிய நாம் எமது அரசியல் வேலை திட்டங்களையும் எமது லாச்சப்பல் பகுதியில் நடைபெறும் விடயங்களையும் இதில் பார்வையிடலாம்.