பிரான்சின் தேசிய நாள் ‘la Fête du 14 juillet

2 வருடங்கள் ago

author: admin

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தமிழ் வர்த்தக மையமாகத் திகழும் பாரிஸ் 10 – லாச்சப்பல் பகுதியில் இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தினால் பிரான்சின் தேசிய நாள் ‘la Fête du 14 juillet’’ (14 ஜூலை) முதன் முறையாக மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

லாசப்பல் பகுதியில் மிக அதிகளவில் ஈழத்தமிழ் வர்த்தகர்களே உள்ளனர்.பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் புகலிட வாழ்க்கை மூற்று தசாப்தங்களைக் கடந்து செல்கின்றது.பிரான்ஸில் பிறந்து வளர்ந்து வருகின்ற இளம் தலைமுறையினர், பிரான்ஸ் நாட்டின் தேசிய விடயங்களில் அக்கறை செலுத்துகிறார்கள்.

இளைய தலைமுறையினரின் முன்னெடுப்புடன் 2022ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் தேசிய நாள் ஈழத்தமிழ் மக்களால் கொண்டாட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தாரகமந்திரம் சுதந்திரம் ,சமத்துவம்,சகோதரத்துவம் என்பது.இதன் அடிப்படையில்

ஈழத்தமிழ் மக்களுக்கும் வாழ்வதற்குப் புகலிடம் வழங்கிய இரண்டாம் தாய்நாடான பிரான்சின் தேசிய தின நிகழ்வு லாச்சப்பல் பகுதியில் இன்று இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

பாரிஸ் லாச்சப்பல் பகுதி முழுவதும் பிரஞ்சு தேசியக்கொடி 14 ஜூலை காலை முதல் பறக்கவிடப்பட்டது.

மாலை 3.30 அளவில் லாச்சப்பல் பகுதில் பிரஞ்சு தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கட்டிகை (Cake) வெட்டப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.பாஸ்கரன் அவர்கள் தலைமைதாங்கினார்.

இதில் பாரிஸ் 10 நகர சபை சார்பாக நகரசபை உறுப்பினரும், பாரிஸ் 10 பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு. Julien Bayou அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பிரஞ்சு புரட்சியில் உயிர்நீத்த மக்களுக்காகவும், தமிழின அழிப்பில் உயிர் நீத்த மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் julien bayou பிரஞ்சு புரட்சி பற்றி உரையாற்றினார். இலங்கையில் நடைபெற்றுவரும் தற்போதை அரசியல் நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மக்களுடனும், இலங்கை இந்திய வர்த்தக சங்கத்துடனும் இணைந்து பயணிக்க தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

பாரிஸ் 10 நகரசபை உறுப்பினர் உரையாற்றுகையில், லாச்சப்பல் பகுதி முழுவதும் பிரஞ்சுக் கொடி பறக்கவிடப்பட்டிந்தமை அழகாக இருந்ததாகவும். தாங்கள் மகிழ்வதாகவும்,

தமிழ் மக்கள் பிரஞ்சு தேசிய தினத்தை கொண்டாடுவதை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்திருந்திருந்தார். தொடர்ந்து தான் தமிழ் மக்களுடன் பயணிக்க விரும்புவதாகவும் உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும் ,நகரசபை உறுப்பினரும் தமிழ்ச் சிறுவர்களுடன் இணைந்து பிரஞ்சு கொடி பொறிக்கப்பட்டிருந்த (Cake) கட்டிகையை வெட்டினார்கள்.கட்டிகைகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வர்த்தக சங்கத்தின் நன்றியுரையுடன் பிரஞ்சு தேசிய தின நிகழ்வு லாசப்பலில் நிறைவு பெற்றது.