திரான்சி நகரில் உள்ள Espace Culturel du Parc மண்டபத்தில்“பொய்யா விளக்கு” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட திரையிடலின் போது திரான்சி நகரசபை முதல்வரும், பிரதி முதல்வரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக திரான்சி நகரசை முதல்வர் அவர்கள் டாக்டர். திரு.வரதராஜன் அவர்களுடன் வாட்சப் காணொளி வாயிலாக உரையாடி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.