கடந்த 15.09.2024 தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பு ஆரம்பித்த நாள் தொடக்கம் காலை 10மணி தொடக்கம் 18மணி வரை நடைபெற்ற வணக்க நிகழ்வின் இறுதி நினைவேந்தல் நிகழ்வு 26.09.2024 திலீபன் அவர்கள் சாவடைந்த நேரமான 10மணி 48 நிமிடங்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 18மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வானது தமிழர் வர்த்தக மையத்தில் நகரசபை மற்றும் காவல்துறையினரின் அனுமதியுடன் தொடர்ந்து நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.